திமுக அமளியால் போர்க்களமானது சட்டசபை.. நாற்காலிகள் உடைப்பு, பேப்பர்கள் கிழிப்பு

சென்னை: சட்டசபையில் சபாநாயகர் எதிரேயுள்ள நாற்காலியை உடைத்து திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போர்க்களமானது சட்டசபை.
எடப்பாடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பை இன்னொரு நாளில் வைத்துக்கொள்ளலாம் என்று திமுக உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை சபாநாயகர் தனபால் ஏற்க மறுத்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் தனபாலை முற்றுகையிட்டு திமுகவினர் ரகளை செய்தனர். திமுக உறுப்பினர் பூங்கோதை மேஜை மீது ஏறி நின்று கோஷமிட்டார். சபாநாயகர் எதிரேயிருந்த நாற்காலிகள் சில தூக்கி வீசப்பட்டன. நாற்காலிகள் உடைக்கப்பட்டன. அதேநேரம், வன்முறை நிலை ஏற்பட்டால் ஆட்சி கலையுமோ என்ற அச்சத்தால் எடப்பாடி தரப்பு அமைதியாக இருந்தது.
DMK MLAs tear paper, throw chairs in the assembly

Recent Posts