பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ல் இடைத்தேர்தல்!

சென்னை ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
சென்னை: ஜெயலலிதா மறைவை அடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பாமலேயே உயிரிழந்தார். டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்ததை முன்னிட்டு அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/election-commission-announced-r-k-nagar-poll-on-april-12-276353.html

Recent Posts