ஆர். கே. நகரில் சசி அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்!

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்க மின் கம்பம் ஒதுக்கியுள்ளது.இரட்டை இலை


சென்னை: இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதை அடுத்து ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு தொப்பி, கிரிக்கெட் பேட், ஆட்டோ ரிக்ஷா ஆகிய மூன்று சின்னங்களில் ஏதாவது ஒன்றை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் பட்டியல் அளிக்கப்பட்டது. சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் ஆட்டோ ரிக்சா சின்னத்தை ஒதுக்கியது. அதை ஏற்க மறுத்ததை அடுத்து தொப்பி சின்னத்தை சசிகலா அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு மல்லுக்கட்டின.

0 Response to ஆர். கே. நகரில் சசி அணிக்கு தொப்பி, ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின் கம்பம் சின்னம்!

Post a Comment

Recent Posts