அதிமுக அம்மா - அதிமுக புரட்சித்தலைவி அம்மா: சசி, ஓபிஎஸ் அணிகளின் புதிய கட்சி பெயர்கள்

சசிகலா அணியினர் கட்சிக்கு 'அதிமுக அம்மா' என்ற பெயரும், ஓபிஎஸ் அணிக்கு 'அதிமுக புரட்சித்தலைவி அம்மா' என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக அம்மா
சென்னை: சசிகலா அணியினர் கட்சிக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும் ஓபிஎஸ் அணியினரின் கட்சிக்கு அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு காலியாக உள்ள ஆர்.கே. நகரில் எப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணியினர் இரட்டை இலை சின்னத்தை கேட்டு மனு தாக்கல் செய்தன. இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது என்பது குறித்து சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய அணிகளிடம் விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் ஐந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் யாருக்கும் கிடையாது. சின்னம் முடக்கப்படுகிறது.ஒரு அணிகளும் அதிமுக என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-team-party-new-name-admk-amma-277712.html

0 Response to அதிமுக அம்மா - அதிமுக புரட்சித்தலைவி அம்மா: சசி, ஓபிஎஸ் அணிகளின் புதிய கட்சி பெயர்கள்

Post a Comment

Recent Posts