தீபா ஏன் ஓபிஎஸ் அணியினரோடு சேரவில்லை தெரியுமா? அவரே சொல்லும் காரணத்தை பாருங்கள்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா ஏன் ஓபிஎஸ் அணியினரோடு சேரவில்லை என்பது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

சென்னை: ஓபிஎஸ் அணியினரும் சசிகலாவுடன் இருந்தவர்கள் தான் அதனால் அவர்களுடன் சேர தனக்கு விருப்பமில்லை என தீபா தெரிவித்துள்ளார். மேலும் தன்னை எதிர்த்து ஆர்கே.நகரில் போட்டியிடுபவர்கள் அனைவரும் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர்கள் என்றும் தீபா தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டுவருகிறார். அவருக்கு பொதுமக்கள் உட்பட அதிமுகவினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதிமுகவை மீட்க ஓபிஎஸ் உடன் இணைந்து இரு கரங்களாக செயல்படுவோம் என்றும் அவர் கூறினார்.
ஓபிஎஸ் தரப்பை அதிர வைத்த தீபா
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/deepa-explains-why-she-is-not-joining-with-ops-team-the-rk-nagar-by-poll-278425.html

0 Response to தீபா ஏன் ஓபிஎஸ் அணியினரோடு சேரவில்லை தெரியுமா? அவரே சொல்லும் காரணத்தை பாருங்கள்!

Post a Comment

Recent Posts