பெங்களூரு சிறையில் குற்றவாளி சசிகலா அட்டகாசம்- விதிமுறைகளை துவம்சம் செய்தது அம்பலம்!

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி சசிகலா விதிமுறை மீறி அட்டகாசம் செய்து வருவது அம்பலமாகியுள்ளது. தம்மை அரசியல்வாதி என கூறிக் கொண்டு விதிகளை துவம்சம் செய்து வருகிறாராம் சசிகலா.
சசி அரசியல்வாதியாம்
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கின் குற்றவாளி சசிகலா பெங்களூரு சிறை விதிகளை காலில் போட்டு மிதித்து துவம்சம் செய்து வருவது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அம்பலமாகியுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர் சசிகலா. பெங்களூரு சிறையில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார். குற்றவாளி சசிகலா சிறைக்கு போனது முதலே தமக்கு ஏகத்துக்கும் சலுகைகள் வழங்க அனுமதி கோரினார். அட்டாச் பாத்ரூம், கட்டில், வீட்டு உணவு என சிறைக்குள் சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க நினைத்தார் சசிகலா. ஆனால் சிறை நிர்வாகம் இவற்றுக்கு அனுமதி தரவில்லை.

Read more at: http://tamil.oneindia.com/news/india/how-sasikala-runs-tamil-nadu-from-jail-278924.html

0 Response to பெங்களூரு சிறையில் குற்றவாளி சசிகலா அட்டகாசம்- விதிமுறைகளை துவம்சம் செய்தது அம்பலம்!

Post a Comment

Recent Posts