பாமக வக்கீல் பாலுவின் ஸ்டாலின், ஓபிஎஸ், கமலுடனான திடீர் சந்திப்பு... பரபர பின்னணி

மு.க. ஸ்டாலின், ஓபிஎஸ், கமல்ஹாசன் ஆகியோரை பாமக வழக்கறிஞர் பாலு திடீரென சந்தித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலின், ஓபிஎஸ்ஸுடன் சந்திப்பு
சென்னை: ஆர்.கே.நகர் களேபரங்களுக்கு மத்தியில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது பாமக வழக்கறிஞர் பாலுவின் அரசியல் திடீர் சந்திப்புகள். மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நடிகர் கமல்ஹாசனை பாலு சந்தித்தது ஏன் என்பதுதான் அரசியலின் ஹாட் அலசல்களில் ஒன்று. நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு காரணமானவர்களில் பாமகவின் வழக்கறிஞர் பாலுவும் ஒருவர். தற்போது நாடு முழுவதும் மாநில, தேசிய நெடுஞ்சாலை மதுபான கடைகள் மூடப்பட்டுவிட்டன. இதனால் பெரும்பாலான நகரங்களில் மதுபான கடைகளை குடிகாரர்கள் தேடி அலையும் நிலைதான் இருக்கிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/why-pmk-s-balu-meets-stalin-ops/slider-pf231132-278989.html

0 Response to பாமக வக்கீல் பாலுவின் ஸ்டாலின், ஓபிஎஸ், கமலுடனான திடீர் சந்திப்பு... பரபர பின்னணி

Post a Comment

Recent Posts