அந்தமானில் நவ.7ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

டெல்லி:அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
அந்தமான் கடற்பகுதியில் 7ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

0 Response to அந்தமானில் நவ.7ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை... கன மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

Post a Comment

Recent Posts