தீவிரமாகும் ஓகி... சபரிமலை பக்தர்கள் இரவு பயணத்தை தவிர்க்க பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

பத்தனம்திட்டா : ஓகி புயல் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி சபரிமலை வரும் பக்தர்கள் இரவு பயணத்தை தவிர்க்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கன்னியாகுமரி, கேரள கடல் எல்லைப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் ஓகி புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்தப் பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இரண்டாம் வகை புயல் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம் புயலானது திருவனந்தபுரம் கடலுக்கு அருகே 70 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே அசம்பாவிதங்களை தவிர்க்க சபரி மலை பக்தர்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மலைப்பாதைகள் மற்றும் காடுகளை கடந்து கட்டாயம் இரவு நேர பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
போலீசார் எச்சரிக்கை
Read more at: https://tamil.oneindia.com/news/india/pathanamthitta-administration-issued-alert-sabarimala-pilgrims/articlecontent-pf277951-303545.html

0 Response to தீவிரமாகும் ஓகி... சபரிமலை பக்தர்கள் இரவு பயணத்தை தவிர்க்க பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

Post a Comment

Recent Posts