சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.. மக்கள் வதந்திகளை நம்பவேண்டாம்.. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்

ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவான் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓகி புயலாக மாறியுள்ளது. இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடலின் சீற்றமும் அதிகரித்துள்ளது.
சுனாமி வதந்தியால் பீதி இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுனாமி பேரலைகள் தாக்கப்போவதாக தகவல் வெளியானது. சமூக வலைதளங்களில் தீயாக பரவிய இந்த தகவலால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். 

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/no-tsunami-warning-given-kanniyakumari-districts-collector/articlecontent-pf277888-303516.htmlசுனாமி வதந்தியால் பீதி

Recent Posts