ஓகி புயல் : கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

கன்னியாகுமரி: ஓகி புயல் கன்னியாகுமரிக்கு தெற்கே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக குமரியில் காற்றோடு பலத்த மழை பெய்வதால் அனைத்து விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் உருவான தாழ்வுப் பகுதியானது இன்று காலை மேலும் தீவிரமடைந்தது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக உருவெடுத்துள்ளது. குமரியில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள இந்தப் புயலுக்கு ஓகி என பெயர் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் வியாழக் கிழமை அதிகாலை 2 மணி முதல், பலத்த சூறைக்காற்றுடன் குமரி மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் துவங்கியது. 
வேறோடு சாய்ந்த மரங்கள்
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cyclone-ockhi-trains-cancelles-from-kanyakumari/articlecontent-pf277899-303520.html

0 Response to ஓகி புயல் : கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

Post a Comment

Recent Posts