Breaking News Live: வைகோ பிரசாரத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்: தமிழிசை, எச்.ராஜா கடும் கண்டனம்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரசார யாத்திரையின் போது கருப்புக் கொடி பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சித்தராமையா கடிதம் காவிரி நதிநீர் பங்கீட்டுக்கான வரையறையை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் காவிரி மேலாண்மை வாரியம்தான் அமைக்க வேண்டும் என்பது நிலைப்பாடு. மத்திய அரசோ, கர்நாடகாவின் குரலில், ஸ்கீம் என்பதுதான் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்கிறது. தற்போது தாங்கள் உருவாக்கிய திட்டத்தின் அடிப்படையில் காவிரி நதிநீரை பங்கீட்டுக்கான வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்கிறது கர்நாடகா. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார். அதில், மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது எனவும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.Image result for vaiko

Read more at: https://tamil.oneindia.com/news/india/bjp-condemns-udangudi-attack-live-updates-317802.html

0 Response to Breaking News Live: வைகோ பிரசாரத்தில் பாஜகவினர் மீது தாக்குதல்: தமிழிசை, எச்.ராஜா கடும் கண்டனம்

Post a Comment

Recent Posts