சோ ராமசாமி மறைவிற்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: உடல் நலமில்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று அதிகாலை மரணம் அடைந்த துக்ளக் பத்திரிகையாளர் சோ ராமசாமிக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவால் கடந்த மாதம் 29ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ ராமசாமி அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
0 Response to சோ ராமசாமி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது… கருணாநிதி இரங்கல்!
Post a Comment