சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான வதந்தி பரவியதைத் தொடர்ந்து சென்னையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. சாலைகளும் வெறிச்சோடிய நிலையில் உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து இன்று மாலை தவறான தகவல் வெளியானதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் ஏற்பட்டது. வதந்தி வெளியான சில நொடிகளிலேயே தமிழகம் முழுவதும், கடைகள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது. பல இடங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், டீ கடை, ஓட்டல்கள் என அனைத்தும் உடனடியாக மூடப்பட்டது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-death-rumor-shops-theatres-are-closed-269038.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-death-rumor-shops-theatres-are-closed-269038.html
0 Response to ஜெயலலிதா உடல்நிலை குறித்து தவறான வதந்தி.. வெறிச்சோடி கிடக்கும் சென்னை !
Post a Comment