முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு இ.சி.எம்.ஓ (ECMO- EXTRA CORPOREAL MEMBRANE OXIGENATION) என்ற சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
ஒருவருக்கு இதயமும், நுரையீரலும் செயல்படாத நிலை ஏற்படும் போது செயற்கையாக பிராண வாயுவை செலுத்துவதற்கான வழிமுறையே இ.சி.எம்.ஓ எனப்படுகிறது. இதயத் துடிப்பு சரியாக செயல்படாமல் தடைபடும் போது இறுதி முயற்சியாக மருத்துவர்கள் மேற்கொள்ளும் நவீன சிகிச்சைகளில் இதுவும் ஒன்று. இதயம் மற்றும் நுரையீரல் இயற்கையாகவே கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி ஆக்சிஜனை உள்வாங்கும் செயலை செய்து வருகிறது. இதயம், நுரையீரல் இச்செயலை செயல் படுத்த முடியாத நிலை ஏற்படும் போது இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் இவ்விரு உறுப்புகளுக்கும் செயற்கையாக பிராண வாயு செலுத்தப்பட்டு ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறது. மேலும் இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி செயற்கையாக ஆக்சிஜன் செலுத்தப்படுகிறது. ஒருவருக்கு இதயம் மற்றும் நுரையீரலின் செயல்பாடுகள் முற்றிலும் தடைபடும் நிலையிலேயே அதிகபட்ச சிகிச்சை முறையாக இ.சி.எம்.ஓ பயன்படுத்தப்படுவதாக மருத்துவக் குறிப்புகளில் இருந்து தெரிய வருகிறது.
இதயத்தின் செயல்பாடு நின்றுபோகும் நிலையே மருத்துவ ரீதியாக கார்டியாக் அரெஸ்ட் என்றழைக்கப்படுகிறது. தற்போது அத்தகைய சிக்கலான நிலையில் தான் ஜெயலலிதாவுக்கு இதயம், நுரையீரல் முறையாக செயல்படாமல் போக இ.சி.எம்.ஓ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0 Response to முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை 'இ.சி.எம்.ஓ' பற்றி அறிந்து கொள்வோம்!
Post a Comment