திரைத் துறையில் சோவின் பங்களிப்பு மேம்போக்காகப் பார்த்தால் பெரிதாகத் தெரியாது. எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஏதோ காமெடி வேடங்கள் செய்தவர், ரஜினியுடன் சில படங்களில் நடித்தவர் என்பதுதான் அவரைப் பற்றிய பாமரப் பார்வை. ஆனால் சோவின் பங்களிப்பு திரைத்துறையில் குறிப்பிடத்தக்கது. சோ நடித்துள்ள படங்கள் மட்டும் 200. இவற்றைத் தாண்டி 20 படங்களுக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். முகமது பின் துக்ளக் என்ற தனது பிரபலமான நாடகத்தை அதே பெயரில் சோ படமாக்க, அது அந்நாட்களில் மிகச் சிறந்த அரசியல் எள்ளல் படமாகத் திகழ்ந்தது. இன்று பார்த்தாலும் ரசிக்கும்படியான ஒரு படம் அது.

Read more at: http://tamil.filmibeat.com/news/cho-s-film-journey/slider-pf52133-043711.html
Read more at: http://tamil.filmibeat.com/news/cho-s-film-journey/slider-pf52133-043711.html
0 Response to சோவின் திரைப்பயணம்... மறக்க முடியுமா அந்த துக்ளக்கை!!
Post a Comment