சென்னை: மாஜி தலைமைச் செயலாளர். கு.ஞானதேசிகன் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யும் முயற்சிகள் நீண்ட நாட்களாகவே நடந்து வந்ததாக ஏற்கனவே நாம் செய்தி போட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஞானதேசிகன். இதன் பின்னணியில் வைகுண்டராஜன் பெயர் அடிபட்டது. வைகுண்டராஜனுக்கு எதிரான ஒரு பைலில் ஞானதேசிகன் கையெழுத்து போடாமல் இழுத்தடித்ததே சஸ்பெண்ட் ஆனதற்கு காரணம் என்று கோட்டை வட்டார தகவல்கள் தெரிவித்தன.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/gnandesikan-s-suspension-revoked-273658.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/gnandesikan-s-suspension-revoked-273658.html
0 Response to மாஜி தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சஸ்பெண்ட் ரத்து.. ஓ.பன்னீர் செல்வம் அதிரடி!
Post a Comment