சென்னை: பணத்தின் மூலம், வாக்குகளை பெற்று ஜெயித்து விடலாம் என்ற திட்டத்தில் டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட களமிறங்கியுள்ளது இன்றைய கைது நடவடிக்கை ஒன்றின் மூலம் அம்பலமாகிவிட்டது. ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மம், சசிகலா அவசரமாக அதிமுக பொதுச்செயலாளரானது, சசிகலா சிறைக்கு போனது, சசிகலா சிறைக்கு போகும் முன்பாக, ஜெயலலிதாவால் கட்சியை விட்டே நீக்கப்பட்ட டிடிவி தினகரனை, அந்த கட்சிக்கே துணை பொதுச் செயலாளராக்கிய சசிகலாவின் செயல் போன்றவை மக்களிடம் கண்டிப்பாக வெறுப்பையே ஏற்படுத்தியிருக்கும். சிறு குழந்தைக்கே இந்த விஷயம் தெரியும்போது, எப்படி ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் துணிந்து போட்டியிடுகிறார் என்ற சந்தேகம் அரசியல் விமர்சகர்களுக்கே எழுந்தது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-s-plan-get-votes-rk-nagar-election-is-known-fact-now/slider-pf229880-278440.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-s-plan-get-votes-rk-nagar-election-is-known-fact-now/slider-pf229880-278440.html
0 Response to ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற டிடிவி தினகரன் போட்ட குறுக்குவழி திட்டம் அம்பலம்!
Post a Comment