சென்னை: கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இரண்டாவது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் துவங்கியது. விடாமல் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மின்சார சேவையும் சில இடங்களில் தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/holiday-declared-districts-schools-due-heavy-rain-300293.html

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/holiday-declared-districts-schools-due-heavy-rain-300293.html
0 Response to விடிய விடிய கனமழை - சென்னை, காஞ்சி உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை
Post a Comment