சிறையிலிருந்து நடக்கப் போகும் ஆட்சி.. வாழ்த்துகள் தமிழர்களே.. கட்ஜு சாட்டையடி!

சென்னை: உலகத் தமிழர்களைப் போலவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கும் கூட சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை சகித்துக் கொள்ள முடியவில்லை போலும். அடுத்தடுத்து இந்த அமைச்சரவையை விமர்சித்துப் பதிவு போட்டுள்ளார். கட்ஜு போட்டுள்ள இன்னொரு முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
சிறையிலிருந்து நடக்கப் போகும் அரசு அமைந்துள்ளது தமிழகத்தில். சிறைக்குப் போகும் முன்பு சசிகலா தனது உறவினர் தினகரனை, அவர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர், பொறுப்பில் நியமித்து விட்டுப் போயுள்ளார். அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். அவரே பொதுச் செயலாளராகவும் நீடிக்கிறார். இப்போது அவர்களது கைப்பாவை பழனிச்சாமி அடுத்த முதல்வராகியுள்ளார்.
Katju congratulates Tamilians for having pro Sasikala Govt
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/katju-congratulates-tamilians-having-pro-sasikala-govt-274316.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/katju-congratulates-tamilians-having-pro-sasikala-govt-274316.html

0 Response to சிறையிலிருந்து நடக்கப் போகும் ஆட்சி.. வாழ்த்துகள் தமிழர்களே.. கட்ஜு சாட்டையடி!

Post a Comment

Recent Posts