ராயுடு, ரெய்னா அதிரடி.. மாஸ் காட்டிய சிஎஸ்கே.. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் பஞ்சாப் 4 வெற்றி 1 தோல்வியுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் சென்னை அணிக்கும் 4வது இடத்தில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்து வருகிறது. இரண்டு வலுவான அணிகள் ஹைதராபாத் அணி மிகவும் வலிமையான பவுலிங் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் சென்னை அணி பிராவோ, வாட்சன் போன்ற சிக்ஸர் ஹீரோக்கள் மூலம் மிகவும் வலுமையான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. இதனால் இந்த போட்டி இப்போதே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றம் இந்த போட்டி தற்போது ஹைதராபாத் மைதானத்தில் நடக்கிறது. à®‡à®°à®£à¯à®Ÿà¯ வலுவான அணிகள் இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத் அணியில் ஷிகர் தவான் இடம்பெறவில்லை, அவருக்கு பதில் ரிக்கி களமிறங்கியுள்ளார். சென்னை அணியில் தாஹிர் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக டு பிளசிஸ் அணிக்கு வந்துள்ளார். முதல் பேட்டிங் தற்போது இந்த போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்றுள்ளது. டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது. சென்னை அணி பேட்டிங் களமிறங்குகிறது. சென்னை அணி முதலிலேயே வரிசையாக வாட்சன், டு பிளசி விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன்பின் வந்த ரெய்னா, அம்பதி ராயுடு அதிரடியாக ஆடினார்கள். களத்தை புரிந்து கொண்டு, பின் பொறுமையாக ஸ்கோரை உயர்த்தினார்கள். சூப்பர் பார்ட்னர்ஷிப் அம்பதி ராயுடு மிகவும் அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரெய்னா அதிரடியாக ஆடி, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 5 பவுண்டரி அடக்கம். கடைசி நேரத்தில் டோணியும் அதிரடி காட்டி 12 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதில் 1 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம். இதனால் சென்னை அணி 20 ஓவருக்கு 3 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்தது. ஹைதராபாத்திற்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

Read more at: https://tamil.mykhel.com/cricket/chennai-faces-hyderabad-ipl-2018/articlecontent-pf23224-010151.html

Recent Posts