சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் - 22 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு கட்ட தொடர் சிகிச்சைகளுக்கு பிறகு அவரது உடல் நலம் தேறி வந்தது. விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது இதயவியல் மற்றும் சுவாசவியல் மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அப்பல்லோ வாசலில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் ஏராளமாக போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Read more at: http://tamil.oneindia.com/news/videos/tamil-nadu-cm-jayalalithaa-suffers-cardiac-arrest-being-monitored-by-experts-268984.html
Read more at: http://tamil.oneindia.com/news/videos/tamil-nadu-cm-jayalalithaa-suffers-cardiac-arrest-being-monitored-by-experts-268984.html
0 Response to உடல்நலம் தேறி வந்த ஜெ.வுக்கு திடீர் மாரடைப்பு... மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி- வீடியோ!
Post a Comment