அப்பல்லோவில் ஜெ.: கவலையாய் கடந்த செப்டம்பர்.. ஆறுதல் தந்த நவம்பர்... அதிர்ச்சி தந்த டிசம்பர்!

சென்னை: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா எப்படியும் இன்னும் சில தினங்களில் டிஸ்சார்ஜ் ஆகி விடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Jayalalithaa in Apollo Hospitals: A timeline

கடந்த செப்டம்பர் 22ம் தேதி தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர், அவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையின் பலனாக அவர் உடல்நலம் தேறியது. இதனால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். விரைவில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-apollo-hospitals-timeline-268977.html

0 Response to அப்பல்லோவில் ஜெ.: கவலையாய் கடந்த செப்டம்பர்.. ஆறுதல் தந்த நவம்பர்... அதிர்ச்சி தந்த டிசம்பர்!

Post a Comment

Recent Posts