சென்னை: இன்று மாலை 5 மணிக்கு சட்டசபை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. சபாநாயகர் தனபால் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கோ.சி.மணி உள்ளிட்ட மறைந்த தலைவர்கள் மறைவுக்கு நாளை இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும் பிறகு சட்டசபை ஒத்தி வைக்கப்படும். 27, 30 மற்றும் 31ம் தேதிகளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடைபெறும். பிப்ரவரி 1ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசுவார். அன்றே சட்டசபை தொடர் முடிவடையும் என்றார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/special-assembly-session-at-5-pm-today-table-ordinance-272457.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/special-assembly-session-at-5-pm-today-table-ordinance-272457.html
0 Response to இன்று மாலை கூடுகிறது சிறப்பு சட்டசபை.. ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை நிறைவேற்ற முடிவு!
Post a Comment