ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5.30 மணிக்கு நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. முதல்வர் பதவியில் இருந்து தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டேன் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். அத்துடன் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தமக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ஆளுநரிடம் முதல்வர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார். சசிகலாவோ தமக்கே அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கிறது; என்னை முதல்வராக்குங்கள் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த சசிகலா ஆளுநரை மிரட்டும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிவந்தார்.
தகர்ந்த கனவு
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-governor-gives-appointment-edappadi-palanisamy/slider-pf221814-274075.html

0 Response to ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் எடப்பாடி பழனிச்சாமி!

Post a Comment

Recent Posts