சென்னை: ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கும் வரை ரிசாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று சசிகலா உத்தரவிட்டுள்ளதால் 9வது நாளாக அதிமுக எம்எல்ஏக்களின் ஆடம்பர சிறை வாழ்க்கை நீடிக்கிறது. பெங்களூரு சிறையில் சசிகலா அடைக்கப்பட்ட பின்னராவது அதிமுக எம்எல்ஏக்கள் விடுவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதியன்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் 40 நிமிட தியானம் இருந்தார். சசிகலாவைப் பற்றி அடுக்கடுக்கானகுற்றச்சாட்டுகளை முன் வைத்தார். கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தாக பன்னீர் செல்வம் கூறியது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. இதனையடுத்து அதிமுக இரண்டாக பிளவு பட்டது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. சில எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவருடன் இணைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடந்த 8ஆம் தேதி முதல் கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-mlas-staying-8th-day-resort-kuvathur-274152.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aiadmk-mlas-staying-8th-day-resort-kuvathur-274152.html
0 Response to சசிகலா சிறைக்கு போனாலும் கூவத்தூர் சிறையை விட்டு எம்எல்ஏக்கள் வரமாட்டாங்க போலிருக்கே!
Post a Comment