சென்னை: சசிகலா சிறைக்குப் போகிறார். ஆட்சியமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரி நிற்கிறார். மறுபக்கம முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நான் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பேன் என்கிறார். இன்னொரு பக்கம் ரிசார்ட்டுக்குள் ஒரு பிரவு எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலான சூழ்நிலையில் தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கலாம்.. யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம் என்பது குறித்த அலசல் இது. தற்போது சசிகலா சிறைக்குப் போகப் போவதால் அவரது கட்டுப்பாட்டில் உள்ள கட்சிக்குள், எம்எல்ஏக்களுக்குள் மாற்றம் வர வாய்ப்புள்ளது. சசிகலாவ மதித்தார்கள் என்றால் அதே போல தினகரனையோ அல்லது வேறு யாரையுமோ மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுகவினர் நினைக்க ஆரம்பித்து விட்டால் நிலைமை தலைகீழாக மாறலாம்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/who-has-the-better-chance-form-the-nexst-tn-govt-274146.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/who-has-the-better-chance-form-the-nexst-tn-govt-274146.html
0 Response to தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கலாம்? ...யார் ஆட்சி அமைக்க வாய்ப்பு அதிகம்?
Post a Comment