மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு... உற்சாகத்துடன் கண்டுகளித்த பார்வையாளர்கள் - வீடியோ

மணப்பாறையில் இன்று பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதனை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நேற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பெரும்பாலான இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி மறுத்த போராட்டக்காரர்கள் நிரந்தர சட்டம் வேண்டும் எனன கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வாடிவாசல் வழியாக ஏராளமான காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. இதில் காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும் இளைஞர்களை ஏமாற்றிச் சென்ற காளைகளுக்கும் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

Read more at: http://tamil.oneindia.com/videos/jallikattu-traditional-competitions-held-in-manapparai-today-48858.html?utm_source=VideosRHS&utm_medium=RHS&utm_campaign=VideosRHS

0 Response to மணப்பாறையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு... உற்சாகத்துடன் கண்டுகளித்த பார்வையாளர்கள் - வீடியோ

Post a Comment

Recent Posts