செவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா? விளாசும் சீமான்

சென்னை: செவிலியர்கள் போராட்டத்திற்கு தடைவிதிப்பதுதான் உயர்நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் கடந்த 3 நாட்களாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக கூறிய உயர்நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை விதித்தது. இதையடுத்து போராட்டத்தை செவிலியர்கள் திரும்பப்பெற்றனர். இந்நிலையில் செவிலியர்களின் போராட்டத்திற்கு தடைவிதித்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, தேனாம்பேட்டையிலுள்ள மருத்துவச் சேவை இயக்குனரக வளாகத்தில் மூன்று நாட்களாகப் போராடி வந்த 3,000க்கும் மேற்பட்ட செவிலியர்களின் போராட்டத்திற்குத் தடைவிதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பானது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. சனநாயக நாட்டில் அறவழியில் போராடி உரிமைகளைப் பெறுவதற்கும், அரசிற்கு அழுத்தம் கொடுத்து பிரச்சினையின் தீவிரத்தன்மையை உணரச் செய்வதற்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் உரிமையிருக்கிறது. இது அரசியலமைப்புச் சாசனம் வழங்கும் அடிப்படை உரிமைகளிலே சொல்லப்பட்டிருக்கிறது. 
இது என்ன நியாயம்?
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/seeman-slams-chennai-high-court-tamilnadu-govt-the-ban-nurse/articlecontent-pf277955-303546.html

0 Response to செவிலியர்கள் போராட்டத்திற்குத் தடைவிதிப்பதுதான் உயர் நீதிமன்றத்தின் உயர்ந்த நீதியா? விளாசும் சீமான்

Post a Comment

Recent Posts