காவிரி மேலாண்மை வாரியம்- ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடல் போராட்டம்

சிட்னி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவின் சிட்னி உள்ளிட்ட 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடல் போராட்டம் நடத்தினர். தமிழக உரிமை பிரச்சனைகளுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் தொடர்ந்து பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காவிரிக்காக ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் இன்று போராட்டம் நடத்தினர். Australian Tamils protest on Cauvery
சிட்னி, அடிலெய்டு உள்ளிட்ட 7 நகரங்களில் ஒரே நேரத்தில் தமிழர்கள் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் மத்திய அரசு வஞ்சிப்பதைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், கீழடி ஆய்வுகளை தொடர வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Read more at: https://tamil.oneindia.com/news/international/australian-tamils-protest-on-cauvery-317834.html

0 Response to காவிரி மேலாண்மை வாரியம்- ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் தமிழர்கள் ஒன்றுகூடல் போராட்டம்

Post a Comment

Recent Posts