பயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் ஒரே நாளில் 5 விவசாயிகள் மரணம்!

தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்து போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து ஒரே நாளில் 5 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர்.


திருவாரூர் வெங்கடாசலம்
திருவாரூர் : வடகிழக்கு பருவ மழை சரியாக பெய்யாதலும், காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்காததாலும் பயிர்கள் காய்ந்து கருகுகின்றன. இதனைக் கண்ட அதிர்ச்சியில் இன்று ஒரே நாளில் மட்டும் 5 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். காவிரியில் இருந்து கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாமல் அடாவடி செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் தலையிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் விடுவதில் தொடர்ந்து பிடிவாதத்தை கடைபிடித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசும் கர்நாடக அரசிற்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறது. இதுதவிர, வடகிழக்கு பருவமழையும் எதிர் பார்த்த அளவிற்கு பெய்யவில்லை. இதனால், தொடர்ந்து விவசாயத்திற்கும் குடிநீருக்கும் நீரின்றி விவசாயிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் சுத்தமாக நீர் இல்லாமல் பயிர்கள் காய்ந்துப் போய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்துப் போனால் விவசாயிகள் பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகிவிட்டது. பயிர்கள் காய்ந்த அதிர்ச்சியில் மாரடைப்பிலும் பல விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/drought-5-farmers-died/slider-pf217770-270809.html

0 Response to பயிர்கள் கருகி நாசம்.. அதிர்ச்சியில் ஒரே நாளில் 5 விவசாயிகள் மரணம்!

Post a Comment

Recent Posts