- ஒரு அரசு மருத்துவரின் வாக்குமூலம் அவசர சிகிச்சையில் பொதுவாக 'drunk and drive' காரணமாக சனி ஞாயிறு இரவுகளில் விபத்து காரணமாக அதிக அளவில் வருவார்கள். நேற்றும் முன் தினமும் அவசர சிகிச்சை நைட் டியூட்டி பார்த்துக் கொண்டிருந்த போது எப்போதும் விட விபத்து எண்ணிக்கை குறைவு. மக்கள் பெருவாரியாக மெரினாவில் இருப்பதால் 'drunk and drive' குறைவு என்று அனுமானித்துக் கொண்டேன். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவில் இருவர் தங்களை அட்மிட் செய்யக் கோரி வந்தனர். எதற்காக அட்மிட் செய்ய வேண்டுமென்று கேட்டபோது போராட்டத்திற்கு தேசியக் கொடியைத் தூக்கி சென்றதாகவும் அதைப் பார்த்த ஒரு கும்பல் தங்களை தாக்கியதாகவும் தெரிவித்தனர். அதற்கு ஏன் தாக்கினார்கள் என்று கேட்டபோது தேசிய கொடி வைத்ததால் தாக்கினார்கள் என்று சொன்னார்கள். சரி சிகிச்சை அளிக்கலாம் என்று எதுவும் காயங்கள் ஆகி விட்டதா என்று கேட்டபோது அதைப் பற்றி அவர் எதையும் சொல்லவில்லை. AR ரிப்போர்ட் மட்டும் வேண்டும் என்று கூறினர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/it-s-well-planned-violence-272532.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/it-s-well-planned-violence-272532.html
0 Response to இது நன்கு திட்டமிடப்பட்ட வன்முறை!
Post a Comment