போராட்டக்காரர்களை வெளியேறச் சொல்கிறார்கள் அலங்காநல்லூர் மக்கள்.. என்ன நடந்தது?

அலங்கநல்லுரில் நேற்றுவரை நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராடிக்கொண்டிருந்த மக்கள், இன்று பிப்ரவரி 1ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடக்கும் என்று குறித்து விட்டனர். அதை விட போராட்டக்காரர்களை வெளியேறவும் கூறி விட்டனர்.

மாபெரும் போராட்டம்
மதுரை: மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த 2014 ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டதால், மூன்றாவது ஆண்டாக 2017 ஆம் ஆண்தும் ஜல்லிக்கட்டு நடத்தவில்லை என்ற சூழ்நிலையில் போராட்டம் ஆரம்பித்தது.
அலங்காநல்லூர் பொதுமக்கள் ஒன்றுகூடி, அங்கு கேட் கடை என்ற பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திநர். 300க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி, சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தை அதற்கு அடுத்தநாள் ஆரம்பித்தனர். அதிலிருந்து அந்த போராட்டம் ஆரம்பித்தது. சில நூரு பேருடன் ஆரம்பித்த போராட்டம் உச்ச ட்டமாக 6 லட்சம் பேர் வரை பங்குகொண்ட போராட்டமாக விரிவடைந்தது.

0 Response to போராட்டக்காரர்களை வெளியேறச் சொல்கிறார்கள் அலங்காநல்லூர் மக்கள்.. என்ன நடந்தது?

Post a Comment

Recent Posts