சென்னை: பொதுமக்கள் நடத்திய போராட்டத்திற்கு நக்சல் ஆதரவாளர்கள், மதவாத, இனவாத அமைப்புகளே தலைமை தாங்கியதாக கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் அறவழி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் நேற்று வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். பலப் பிரயோகத்தில் இறங்கிய போலீஸார் சரமாரியாக பல இடங்களில் தடியடி நடத்தினர். கோவை வஉசி பூங்காவில் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதோடு அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று அப்புறப்படுத்தினர். இந்த சம்பவங்கள் தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பானது. இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/naxal-supporters-lead-the-people-s-protest-says-cbe-police-commissioner/slider-pf219855-272541.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/naxal-supporters-lead-the-people-s-protest-says-cbe-police-commissioner/slider-pf219855-272541.html
0 Response to மாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது நக்சல் ஆதரவாளர்கள்.. கோவை கமிஷனர் ஷாக் பேச்சு!
Post a Comment