நடுநிலை என்று இழுத்தடித்துக் கொண்டிருந்த மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் இன்று ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. இன்று மயிலாப்பூர் எம்.எல்.ஏ நட்ராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளராக உள்ள சசிகலா தலைமையை ஏற்க மறுத்து பலர் முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவித்த பிறகு ஓபிஎஸ்ஸு மேலும் ஆதரவு அதிகரித்து வருகிறது. மயிலாப்பூர் எம்எல்ஏ நட்ராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mla-natraj-extends-supports-ops/slider-pf221775-274061.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/mla-natraj-extends-supports-ops/slider-pf221775-274061.html
0 Response to எல்லாம் "நல்லபடியா" முடிந்ததும்.. ஓ.பி.எஸ் பக்கம் தாவிய மயிலை நடராஜ்!
Post a Comment