சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தப்பியது தமிழகம்.. ராமதாஸ்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக்கூடி பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பொது நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதமாக அமையும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் 2015ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதன்மூலம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் உறுதியானது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இந்தத் தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் 2001-06, 2011-16 ஆகிய ஆட்சிக்காலத்தில் இதைவிட பலமடங்கு அதிக ஊழல்களும், சொத்துக்குவிப்புகளும் நடந்தன என்றும் அதுகுறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

0 Response to சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தப்பியது தமிழகம்.. ராமதாஸ்

Post a Comment

Recent Posts