திமுக எம்எல்ஏக்கள் கடும் ரகளை... சட்டசபை 3 மணிவரை ஒத்திவைப்பு!

சிறப்பு சட்டசபைக்கூட்டம் பெரும் அமளியுடன் தொடங்கியது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஓபிஎஸ் அணி, திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தொடர் அமளியில் ஈடுபட்டனர். 

சென்னை: பரபரப்பான சூழ்நிலையில் சிறப்பு சட்டசபைக்கூட்டம் இன்று காலை கூடியது. சபை கூடியதற்கான காரணம் பற்றி சபாநாயகர் விளக்கம் அளித்தார். தொடர்ந்து முதலில் யார் பேசுவது என்பதில் அமளியும் குழப்பமும் ஏற்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் அணி, திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். சட்டசபையை ஒத்திவைத்து சபாநாயகர் வெளியேறினார். அவை மீண்டும் கூடிய உடன் திமுக எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் கிட்டதட்ட 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதல்வராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை சட்டசபையில் நிரூபிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

TN assembly : Chaos at Tamil Nadu Assembly Floor test
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tn-assembly-chaos-at-tamil-nadu-assembly-floor-test-274477.html

0 Response to திமுக எம்எல்ஏக்கள் கடும் ரகளை... சட்டசபை 3 மணிவரை ஒத்திவைப்பு!

Post a Comment

Recent Posts