பழனிச்சாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கிறது!

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களது ஆதரவைப் பெற எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரமாக முயன்று பார்த்தது. சசிகலா இருந்தபோது அந்த முயற்சிகள் தீவிரமாக இருந்தன. ஆனால் திருநாவுக்கரசர் தவிர தமிழக காங்கிரஸ் தலைவர்களும், கட்சி மேலிடமும் இதை ஏற்கவில்லை. தி்முகவின் நிலைப்பாட்டை ஒட்டியே நமது நிலைப்பாடும் இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் கூறி விட்டது.
Congress MLAs to vote against Palanisamy govt
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/congress-mlas-vote-against-palanisamy-govt-274462.html

0 Response to பழனிச்சாமி அரசுக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கிறது!

Post a Comment

Recent Posts