சசிகலாவிற்கு எதிர்ப்பு- தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் மைத்ரேயன் எம்.பி

தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை மைத்ரேயன் எம்பி இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை மைத்ரேயன் எம்பி இன்று சந்திக்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து மைத்ரேயன் பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் போட்டுத்தான் அவரை பொதுச்செயலாளராக நியமனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்துள்ளது.
OPS team to meet EC in Delhi
Read more at: http://tamil.oneindia.com/news/india/ops-team-meet-ec-delhi-274285.html

0 Response to சசிகலாவிற்கு எதிர்ப்பு- தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் மைத்ரேயன் எம்.பி

Post a Comment

Recent Posts