ஆர்கே நகர் இடைதேர்தல் ரத்து?... இன்று மதியம் அறிவிப்பு??

சென்னை: ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு இன்று பிற்பகலுக்குப் பிறகு வரக்கூடும் என்று தெரிகிறது.
ஆர்கே நகர் தொகுதியே திருவிழா கோலம் பூண்டிருக்கிறது. இதுவரை காணாத அளவிற்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பேராவது லட்சக்கணக்கான பணத்துடன் கைது செய்யப்படுகிறார்கள். இந்நிலையில் இன்று முக்கிய அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை போய்க்கொண்டிருக்கிறது. இவை எல்லாமே ஆர்கே நகர் தேர்தல் ரத்துக்கான ஏற்பாடுகள்தான் என்கிறார்கள். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் அதிகமாக பணம் விளையாடியதால் கடந்த பொதுத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல ஆர்கே நகர் தேர்தலும் ரத்து செய்யப்படலாம்... இன்று மதியம் அறிவிப்பு வரலாம் என்கிறார்கள்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-election-cancel-announcement-expected-at-any-time-today-279074.html

0 Response to ஆர்கே நகர் இடைதேர்தல் ரத்து?... இன்று மதியம் அறிவிப்பு??

Post a Comment

Recent Posts