தொடங்கியது.. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழிகாட்டும் முகாம் !

10 மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டுதல் முகாம் இன்று (06.04.2017) அமைச்சர் செங்கோட்டையன் ஆரம்பித்து வைத்தார்.சென்னை : 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக அரசு தமிழகம் முழுவதும் 1162 வழிகாட்டும் முகாம்களை (06.04.2017) இன்றும், (07.04.2017) நாளையும் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய தெளிவினை ஏற்படுத்துவதற்காக இந்த வழிகாட்டும் முகாம்கள் அமைக்கப்படுகின்றன.
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முடித்த பின்பு மாணவ மாணவியர்கள் என்ன படிக்கலாம், எந்த கோர்ஸ் படிக்கலாம், படித்தால் என்ன வேலை கிடைக்கும் என்பது பற்றி தெளிவாக மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்வதற்காகவே வழிகாட்டும் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் சிறுநகரங்கள், கிராமங்களில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு தங்கள் எதிர்காலத்தைக் குறித்து சரியான விழிப்புணர்வு இல்லை.

0 Response to தொடங்கியது.. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழிகாட்டும் முகாம் !

Post a Comment

Recent Posts