சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து.. பெற்றோர்கள் ஷாக்!

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கிடையாது என்ற அறிவிப்பினால் பெற்றோர்கள் கல்வித் தரம் குறைந்து விடும் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை : சிறுபான்மை பள்ளிகளில் பணியில் சேர தகுதித் தேர்வு அவசியம் இல்லை என்ற நீதிமன்றத்தின் ஆணையை பள்ளிக் கல்வித்துறையும் ஏற்று சிறுபான்மை பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேவையில்லை எனக் கூறியுள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுபவர்களுக்கு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. தமிழகத்தில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. 2014-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு (2017) இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 29-ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதியும் தகுதித் தேர்வு நடக்கவிருக்கிறது.

Read more at: http://tamil.careerindia.com/news/tet-is-not-applicable-teachers-aided-unaided-minority-run-001774.html

0 Response to சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு ரத்து.. பெற்றோர்கள் ஷாக்!

Post a Comment

Recent Posts