கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் "ஓகி" புயல்!

கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் "ஓகி" புயல்! #ockhi

ஓகி புயல் மிரட்டல்- 12 மணிநேரத்தில் வருகிறது- வானிலை மையம் எச்சரிக்கை- வீடியோ சென்னை: வங்கக் கடலில் ஒகி புயல் உருவாகியுள்ளதாகவும், கன்னியாகுமரி அருகே மையம் கொண்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக மணிக்கு 167 கிலோமீட்டர் முதல் 200 கிலோமீட்டர் வேகத்திற்கு காற்று வீசும். இது மிகத் தீவிர புயலாக மாறும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக அடுத்த 36 மணி நேரத்திற்கு தென்தமிழகத்தில் மிக கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடிக்கிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒகி புயல் உருவானது

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/cyclone-ockhi-attack-kanniyakmari-imd-alert-303476.html

0 Response to கன்னியாகுமரிக்கு தெற்கே 60 கி.மீ தொலைவில் "ஓகி" புயல்!

Post a Comment

Recent Posts