இன்னும் மிதக்கும் சென்னை புறநகர்கள்.. கடும் ஆத்திரத்தில் மக்கள்!

சென்னை: 2 நாள் மழைக்கே சென்னை புறநகர்ப் பகுதிகள் மிதப்பதால் குரோம்பேட்டை, தாம்பரம், ஓட்டேரி, அயனாவரம் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நீர் சூழ்ந்திருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசுத் தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் 2 நாள் மழைக்கே சென்னை புறநகர்ப் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. நேற்று முன்தினம் சென்னையில் சராசரிக்கு குறைவான அளவிலேயே மழை பெய்துள்ளது. எனினும் சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், ஊரப்பாக்கம், குரோம்பேட்டை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது. இதே போன்று வடசென்னை பகுதிகளான பெரம்பூர், கொரட்டூர், ஓட்டேரி, வியாசர்பாடி, அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடக்க கால மழையை சமாளிக்க முடியாமல் சென்னையில் பல முக்கிய இடங்கள் வெள்ள நீரில் மிதக்கிறது. 48 மணி நேரமாகியும் இந்த தண்ணீரை வெளியேற்ற வழி தெரியாமல் திண்டாடி வருகின்றனர் மக்கள்.
 மேலும் மோசமடையும்
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-suburban-areas-submerging-at-rain-water/articlecontent-pf270846-300305.html

0 Response to இன்னும் மிதக்கும் சென்னை புறநகர்கள்.. கடும் ஆத்திரத்தில் மக்கள்!

Post a Comment

Recent Posts